செய்திகள்

க.பொ.த உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள்தொடர்பில் தீர்மானம் இன்று.

கல்வி பொது தராதர உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை தொடர்பில் இன்று (15) தீர்மானமொன்று எட்டப்படவுள்ளது.

குறித்த பரீட்சைகளுக்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்கு அதிபர்களுக்கு இன்று வரை காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், ஆசிரியர்−அதிபர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விண்ணப்பங்கள் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லையை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஆசிரியர் தொழாற்சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இன்று தீர்மானமொன்று எட்டப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

Related Articles

Back to top button
image download