செய்திகள்

சகல தமிழர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

சகல தமிழர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைரும் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என உலக தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழர்களின் புலம்பெயர்ந்த அமைப்புகளின் கிளை அமைப்பான உலக தமிழர் பேரவை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

2015 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் தீர்மானம் மிக்க பங்களிப்பை வழங்கிய நிலையில், புதிய அரசாங்கத்தின் செயற்பாட்டில் ஏமாற்றத்தை அனுபவித்த நிலையில், ஒருவித வெறுப்பு மனப்பான்மை தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் தலைவர்களின் கூட்டு நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்க அனைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் மறுப்புத் தெரிவித்தமையும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்பின் உணர்வுகள் அரசியல் அக்கறையின்மை மற்றும் மனச்சோர்வுக்கு இட்டுச் செல்லக் கூடாது நல்ல பயன்தராத வாக்களிப்பு செயற்பாடுகள் மூலம் சர்வதேச சமூகத்துக்குப் பிழையான செய்தியை கொடுப்பதை விட தமிழ் மக்கள் தேர்தலில் ஆர்வமாக பங்கெடுப்பது சிறந்தது எனவும்  குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளரைத் தமிழ் மக்கள் புத்தி சாதுர்யத்துடன் தெரிவு செய்வதும் முக்கியமானது எனவும் உலக தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீணாக்கப்பட்ட வாக்கு தமது விருப்பத்துக்கு மாறான வேட்பாளரை வெற்றிபெறச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button
image download