விளையாட்டு

சகிப் அல்ஹசன் பந்து வீச்சில் சிக்கிய ஆப்கானிஸ்தான்?

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

இன்று பி.ப 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமான போட்டியில் பங்களாதேஷ்,மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன,

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானிக்க பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது, தமக்கு வழங்கப்பட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிஹிர் ரஹீம் 83 ஓட்டங்களையும் ,சாஹிப் அல் ஹசன் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை பொறுத்தமட்டில் முஜீப் யுவர் ரஹமான் 03 விக்கட்டுகளையும்,குல்பாடின் நஜீப் இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

263 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரிகளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 62 ஒட்டங்களால் தோல்வியைத் சந்தித்தது.

அந்த அணி சார்பாக குல்படின் நைப் 47 (75) ஓட்டங்களையும் ,சாமியுல்லா ஷின்வாரி 49 (51)ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பங்களாதேஷ் அணிசார்பில் சகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுக்களையும்,முஷ்தாபிகுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி,பங்களாதேஷ் அணியை வெற்றி பாதைக்கு இட்டுச்சென்றனர்.

Related Articles

Back to top button
image download