உலகம்செய்திகள்

சக ஊழியரை முத்தமிட்ட விவகாரம் : இங்கிலாந்து சுகாதார அமைச்சர் பதவி விலகினார்.!

தனது சக ஊழியரை முத்தமிட்டதன் ஊடாக சமூக இடைவெளியை மீறிய காரணத்தால் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல்இ கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து சக பெண் ஊழியரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக இடைவெளி விதிமுறைகள் அமுலில் இருந்த நேரத்தில், மாட் ஹான்க் தனது ஊழியருக்கு முத்தம் கொடுத்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், இது தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து சுகாதார அமைச்சர் மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து மாட் ஹான்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். எனினும் இந்த சம்பவத்திற்கு பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, உடனடியாக அமைச்சரை பதவி நீக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக சுகாதார அமைச்சர் மாட் ஹான்க் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Related Articles

Back to top button