அரசியல்செய்திகள்

சஜித்துடன் இணைந்த முக்கிய உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன ஐக்கிய தேசிய  கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்  பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  அவர் இதனை தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச நேர்மையான வேட்பாளர் என்பதால் அவருக்கு ஆதரவளிக்க தாம் முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

Related Articles

Back to top button