அரசியல்

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவாரா ?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முகங்கொடுக்க கூட்டணி அமைக்க வேண்டுமா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தையின் போது பிரதமர் உறுப்பினர்களிடம் கேட்டதாக அவர் கூறினார். 

கட்சியில் அதிக விருப்பம் உள்ளவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யுமாறு பிரதமர் தெரிவித்ததாக ரஞ்சன் ராமநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார் .

Related Articles

Back to top button
image download