செய்திகள்

சஜித் தம்பதியினர் பூரண குணம்.!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்றனர்.

இந்நிலையில் பூரண குணமடைந்த அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, இன்று அவ்விருவரும் கொழும்பு 02 கங்காராம விஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, எதிர்க்கட்சித் தலைவருக்கு நல்ல ஆரோக்கியத்துடன் தனது எதிர்கால முயற்சிகளுக்காக தமது வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com