அரசியல்செய்திகள்

சஜித் தொடர்பில் வேலுகுமார் கூறியுள்ள முக்கிய தகவல்.

சஜித் பிரேமதாச என்ற நாமமே மக்கள் மத்தியில் இன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. எனவே, மக்களால் கோரப்படும் வேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார். 

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் கண்டியிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Back to top button