அரசியல்செய்திகள்

சஜித் தேர்தலில் நிற்பது உறுதியானது.

“யாரும் மனதில் எந்தவொரு சந்தேகத்தையும் வைத்துக் கொள்ள வேண்டாம். 2020 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடுவார்.

இந்த தகவலை ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச இன்று மாத்தறையில் நடைபெற்ற வெற்றிக்கான மக்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை வரவேற்பதற்காக மாத்தறையில் இன்று பாரியளவிலான கூட்டம் திரண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர இந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

Related Articles

Back to top button
image download