அரசியல்செய்திகள்

சஜித் தொடர்பில் சம்மந்தன் கூறியுள்ள முக்கிய தகவல்.

வேட்பாளர்கள் தமது கொள்கை நிலைகளை அறிவித்தன் பின்னரே ,யாருக்கு ஆதரவு என்று தமது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்மந்தன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி  ​வேட்பாளராக நியமிக்கப்பட்டதையடுத்து  , அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஆர்.சம்மந்தன் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக்கட்சி  நீண்ட இழுபறி நிலைக்கு பின்னர் அதன் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளது.  இந்த விடயம் அந்த கட்சியை பொருத்தவரையில் ஆரோக்கிய விடயமாகும்.

ஆனால் வேட்புமனுக்கள் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. எமது பிரச்சினைக்கு தீர்வு காணும் வேட்பாளருக்கே நாம் எமது ஆதரவினை வழங்குவோம். 

குறிப்பாக நீண்ட நாட்களாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வேட்பாளருக்கே  எமது ஆதரவை வழங்கவே நாம் தீர்மானித்துள்ளோம்.

Related Articles

Back to top button
image download