அரசியல்செய்திகள்

சஜித் தொடர்பில் சி.வி கூறியுள்ள முக்கிய தகவல்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்தமை தனிப்பட்ட ரீதியில் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் அண்மையில் கத்திரிக்கப்பட்டிருந்தாலும், சஜித்  பிரேமதாச தனது சிறப்பினை வெளிக்காட்டக்கூடியவர் என்பதே தனது கருத்து எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின்  செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download