சமூகம்
சடலம் மீட்கப்பட்ட உயர்வகுப்பு மாணவி!
மட்டக்களப்பு – காத்தான்குடி , கல்லடி வாவி ஓரத்தில் இருந்து மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை காத்தான்குடி பொலிஸால் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான உயர்வகுப்பு மாணவி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த மாணவி காணாமல் போய் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில், சம்பவம் குறித்து காத்தான்குடிபொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.