செய்திகள்

சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு

இன்று (23) முதல் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை குறித்த நடைமுறைகள் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார சேவை தொற்றுநோயியல் மற்றும் கொவிட் – 19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவின் கைச்சாத்துடன் குறித்த சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளைத் தவிர வீட்டை விட்டு வெளியேற இரண்டு பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணிக்கக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளின் எணணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருமண விருந்தினர்களின் உச்சபட்ச எண்ணிக்கை 150 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி இல்லை.

பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் பயணிக்க முடியும்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவைக்கேற்றவாறு பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்த முடியும். அத்துடன் பல சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து பணிபுரிவதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றின் 3வது அலையை கருத்திற் கொண்டு பொது நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com