...
செய்திகள்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4200 ஆக்சிமீட்டர்கள் மீட்பு.

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4200 ஆக்சிமீட்டர்களை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொருட்கள் இறக்குமதி முனையத்தில் சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இவற்றின் பெறுமதி 2.3 மில்லியன் ரூபா (2,344,642) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நேற்றைய தினம் நீர்கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவரை செப்டெம்பர் 21 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் கட்டுநாயக்க சுங்க தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen