செய்திகள்
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட சொகுசு வாகனங்கள் பொலிஸாரால் மீட்பு !

பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 5 சொகுசு வாகனங்கள் சுங்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கத்தின் ஒருகொடவத்தை பண்டகசாலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.
வாகன உதிரிப்பாகங்கள் என்ற போர்வையில் குறித்த வாகனங்கள், இலங்கை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவுடி, பென்ஸ், பீ.எம்.டபிள்யூ மற்றும் ஃபியட் ஆகிய அதிசொகுசு ரக வாகனங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.