செய்திகள்பதுளைமலையகம்

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 8 பசுக்களை பசறை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நமுனுகுல வீதியில் உள்ள பிபிலேகம கிராமத்தில் இருந்து இறைச்சிக்காக வெட்டும் நோக்கில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 8 பசுக்களை பசறை பொலிஸார் நேற்று இரவு பசறை வீதி 10ஆம் கட்டை பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது பசுக்களை பதுளைக்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியும், லொறியின் சாரதியும் அவருடன் இருந்த நபரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்களை எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பசறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ப

சறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி : ராமு தனராஜா

Related Articles

Back to top button