செய்திகள்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் நேற்று மாலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி இழுவை படகில் பயணித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி, ஐந்து கடத்தல்காரர்கள், 6 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் உட்பட 34 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வென்னப்புவ, நாத்தாண்டி, சிலாபம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவினர் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button