சட்டவிரோதமான முறையில் பசுமாடுகளை ஏற்றிச்சென்ற மூவர் கைது
சட்டவிரோதமான முறையில் பசுமாடுகளை ஏற்றிச்சென்ற மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மொனராகலை – தம்பகல்ல பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போதுஇ 14 மாடுகள் மற்றும் அவற்றை கொண்டுச்செல்ல பயன்படுத்திய லொறி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மொனராகலை மெதகம பகுதியில் இருந்து அம்பாறை சம்மாந்துறை பகுதிக்கு குறித்த மாடுகளை கொண்டுச்செல்ல சந்தேக நபரகள் மூவரும் முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெதகம பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் நீண்ட காலமான மிகவும் சூட்சுமமான முறையில் மாடு கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை சியம்பலான்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.