செய்திகள்

சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை கடத்திய 09 பேர் கடற்படையினரால் கைது

கற்பிட்டி , கப்பலடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை கடத்திய 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 818 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் பயணித்த 02 லொறிகளும் கெப் வாகனமும் வேனொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் 23 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் எனவும் அவர்கள் புத்தளம் , நாவுல , மாத்தளை , கற்பிட்டி , தலவில , கலேவல பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button