உலகம்செய்திகள்

சட்டவிரோத பீடி சுற்றும் இலைகளுடன் 06 இந்தியர்கள் கைது.

இரண்டாயிரத்து 379 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகளுடன் இந்திய பிரஜைகள் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் வடமேல் கடற்பிராந்தியத்தில் படகொன்றுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடல் எல்லையிலிருந்து சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கை கடற்பிராந்தியத்திற்கு பிரவேசித்த படகை கடற்படையினர் சோதனையிட்ட போது,பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

74 மூடைகளில் பொதியிடப்பட்ட நிலையில்,பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 27 ஆயிரம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button