செய்திகள்நுவரெலியாமலையகம்

சட்டவிரோத மது விற்பனை -கொட்டக்கலையில் இளைஞர் யுவதிகள் ஆர்ப்பாட்டம் ..

“சட்டவிரோதமான மது விற்பனை பாவனையால் பறிப் போகும் அப்பாவி உயிர்கள்’ என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் 23.1.2020 அன்று தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சகோதரி பவானியின் மரணத்திற்கு காரணமாக இருந்த தந்தையின் மதுப்பாவனைக்கு எதிராகவும் நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோதமான மது விற்பனைக்கு எதிராகவும் மலையக இளைஞர்கள் யுவதிகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமும் கண்டன பேரணியும் 26.01.2020 இன்று காலை நடைப்பெற்றது.

குறித்த பேரணி கொட்டகலை புகையிரத கடவைக்கு முன்பாக ஆரம்பித்து கொட்டகலை பிரதேசசபை வரையில் முன்னெடுக்கப்பட்டது.

கொட்டகலை பிரதேச இளைஞர், யுவதிகள் மற்றும் மலையக சமூகசேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

இந்த பேரணியில் சட்டவிரோதமான மதுவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும்படி பத்தனை போலீஸ் , கொட்டகலை பிரதேசசபை,மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

ஷாருலத்தா

Related Articles

Back to top button