செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் முல்லைத்தீவில் கைது.

முல்லைத்தீவு நாயாறு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மற்றும் புல்மோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கடற்றொழில் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
image download