...
நிகழ்வுகள்

சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் இயங்கும் அறநெறி கல்விச்சாலை மண்டபம் வைபவ ரீதியாக நேற்று திறந்து வைக்கப்பட்டது.


லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் இயங்கும் அறநெறி கல்விச்சாலை மண்டபம் புனரமைப்பு செய்யப்பட்டு வைபவ ரீதியாக நேற்று திறந்து வைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட நாடுளுமன்ற உறுப்பினர்
மயில்வாகனம் உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மேற்படி மண்டபத்தை திறந்து வைத்தார் .

நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்
ஸ்ரீதரன்,மக்கள் தொடர்பு அதிகாரி
பழனி விஜயக்குமார், அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தன்
தோட்ட உதவி முகாமையாளர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி மண்டபத்தை நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் அவர்கள் தனது பிறந்தநாளை சிறப்பிக்கும் முகமாக தனது சொந்த நிதியை இதற்காக ஒதுக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு தோட்ட நிர்வாகம், விசன்பண்ட்லங்கா என்பனவும்
பிரதேச அமைப்பாளர் ரமேஷ் உட்பட பலரும் தமது பங்களிப்பை நல்கி இருந்தனர்.

சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் இயங்கும் மேற்படி அறநெறி கல்விச்சாலை மண்டபம் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்து,தற்போது ப புனரமைப்பு செய்யப்பட்டு கம்பீரமாக காட்சியளிப்பதை காணலாம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen