சினிமா

சன்மியூசிக் தொகுப்பாளரும் சீரியல் நடிகருமான ஆனந்த கண்ணன் காலமானார்.

90’s கிட்ஸ்களின் மனம்கவர்ந்த சன்மியூசிக் தொகுப்பாளர், “சிந்துபாத்” சீரியல் ஆனந்த கண்ணன் காலமானார்.

சிங்கப்பூர் தமிழரான இவர், சன் டிவியில் சிந்துபாத் என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரம் எற்று நடித்தார். 90களில் குழந்தைகள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் மிகப் பிரபலமானவராக திகழந்தார்.

புற்றுநோயின் காரணமாக; சிகிச்சைக்காக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன் இன்று சிகிச்சை பலனின்றி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

இவரின் திடீர் இழப்பானது திரையுலகத்தினரை பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளதோடு, பல திரை பிரபலங்கள் அவரின் மறைவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button