செய்திகள்

சபரிமலையில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவுக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை கோயில் நடை திறக்கப்படவுள்ளது.

சபரிமலை செல்லும் பக்தர்கள் நவம்பர் 17 ஆம் திகதி மாலை அணிந்து விரதம் தொடங்கவுள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்   நடைபெறவுள்ளமையால்,  இலங்கை வாழ் ஐயப்ப பக்தர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது 18 ஆம் திகதி மாலை அணியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஐயப்ப சேவாசங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

சபரிமலை கோயிலில் கார்த்திகை முதல் திகதியில் இருந்து 41 நாள்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும்.

எனவே அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன,  நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும்.

மண்டல பூஜை டிசம்பர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மண்டல கால பூஜைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button