செய்திகள்

சபாநாயகர் முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க சத்தியபிரமாணம் செய்துகொண்டார்

ரணில் விக்கிரமசிங்க , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான நிலையில், 225ஆவது எம்.பியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில், வெற்றியீட்டிய மற்றும் நியமன எம்.பிக்கள் அடங்கலாக 224 பேர், இதுவரையிலும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டிருந்தனர்.

எனினும், கடந்த பொதுத் தேர்தலில், தமக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியலை ஐக்கிய தேசியக் கட்சி நிரப்பவில்லை, நீண்ட இழுப்பறிக்குப் பின்னர், கட்சியின் தலைவரையே நியமிப்பதற்கு கட்சியின் செயற்குழு அண்மையில் தீர்மானித்திருந்தது.

அந்த நிலையில் , ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டு இன்று, எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Related Articles

Back to top button