அரசியல்செய்திகள்

சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 
அறிக்கையொன்றின் மூலம் சபாநாயகர் கரு ஜெயசூரியஇதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில் மதத்தலைவர்கள், பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், தொழில்முனைவோர், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தன்னை தொடர்பு கொண்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

சில முக்கிய விடயங்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு தன்னை தொடர்பு கொண்டவர்கள் கோரியதாக குறித்த அறிக்கையில் சபாநாயகர் கோரியுள்ளார். 

நாட்டினுள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், நிலவும் அரசியல் குழப்பத்தை போக்கி கண்ணியமான ஆட்சியை ஏற்படுத்துவதற்காக நம்பிக்கைமிக்க தலைவர் ஒருவர் நாட்டிற்கு தேவை என்பதால், குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அனைத்து தரப்பினரும் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என சபாநாயகர் கரு ஜயசூரிய குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

1995 ஆம் ஆண்டு முதல் நாம் தொடர்ச்சியாக முகங்கொடுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக ஒன்றிணையும் அரசியல் அணிகளுடன் மாத்திரமே தான் இணைந்து செயற்படவுள்ளதாக சபாநாயகர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button