சப்ரகமுவ மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று
சப்ரகமுவ மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன தலைமையில் சபை கட்டிடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
சப்ரகமுவ மாகாண சபையில் ஆளும் தரப்பில் 28 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் 14 உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் 2 உறுப்பினர்களும் என்ற ரீதியில் 44 உறுப்பினர்கள் உள்ளனர்.
சப்ரகமுவ மாகாண சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன சபை தலைவராகவும், முதலமைச்சராக மஹிபால ஹேரத், மாகாண அமைச்சர்களாக ரஞ்ஜித் பண்டார, பானு முனிப்பிரிய, சிறிலால் விக்கிரமசிங்க, அதுலகுமார ராகுபந்த ஆகியோர் கடந்த ஐந்து வருடங்கள் முதல் இன்று நடைபெறும் இறுதி அமர்வுவரை எவ்வித மாற்றங்களுமின்றி கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சப்ரகமுவ மாகாண சபை கலைக்கப்பட் டதும் அரசியலமைப்பின் 13ஆவது திருத் தத்திற்கமைய தேர்தல் இடம்பெறும் வரை ஆளுநர் ஆட்சி இடம்பெறுவதாகவும் தெரி விக்கப்படுகின்றது.