ஆன்மீகம்

சப்பிரகமுவ- மாகாணம்- பலாங்கொடை நகர்- அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

 

மருள் போக்கி அருளளித்து வாழவைக்கும் தாயே
மன அமைதி தந்தருள உடனிருப்பாய் நீயே
பலாங்கொடையில் கோயில் கொண்ட பேரருளே தாயே
எங்கள் நலன் காத்திடவே உடனிருப்பாய் நீயே

நன்மைகள் நல்கி யெம்மை வாழவைக்கும் தாயே
நேர்மைமிகு பெருவாழ்வைத் தந்திடுவாய் நீயே
மலையகத்தில் குடி கொண்ட பேரருளே தாயே
எங்கள் நலன் காத்திடவே உடனிருப்பாய் நீயே

நோய் நொடிகள் நீக்கியெம்மைக் காக்கின்ற தாயே
நொந்து மனம் வாடாமல் அருளிடுவாய் நீயே
ஒழுக்கமிகு பண்பினையே எமக்காக்கும் தாயே
எங்கள் நலன் காத்திடவே உடனிருப்பாய் நீயே

வாழ்விற்கு ஒளியேற்றி மலர்ச்சி தரும் தாயே
வேதனைகள் அண்டாது தடுத்தருள்வாய் நீயே
உள்ளத்தில் உறுதி தரும் எங்கள் திருத்தாயே
எங்கள் நலன் காத்திடவே உடனிருப்பாய் நீயே

அழகுமிகு திருக்கோயில் உள்ளுறையும் தாயே
அச்சமில்லா நிம்மதியை எமக்கருள்வாய் நீயே
எழுச்சி மிக்க மனங்கொண்டு வாழவைக்கும் தாயே
எங்கள் நலன் காத்திடவே உடனிருப்பாய் நீயே

மலரொத்த திருப்பாதம் உடையவளே தாயே
மாசில்லா மனமெமக்குத் தந்தருள்வாய் நீயே
நம் வாழ்வு உன் பொறுப்பு நலங்காக்கும் தாயே
எங்கள் நலன் காத்திடவே உடனிருப்பாய் நீயே.

 

Related Articles

Back to top button