
பசறை, பெல்ஹாதன்ன ஏழாம் கட்டையைச் சேர்ந்த பழனியாண்டி மாரிமுத்து அவர்கள் பதுளை மாவட்ட எல்லைக்குட்பட்ட
சமாதான நீதவானாக பசறை நீதவான் மன்றில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.
இவர் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராகும். அத்தோடு பதுளை ரொக்கிள் காளியம்மன் தேவஸ்தான முன்னாள்
குமாஸ்தாவாகவும், மடுல்சீமை பெருந்தோட்டப்பகுதிகளில் வெளிக்கள உத்தியோகஸ்தராகவும் பணியாற்றியுள்ளார்.

பல்வேறு சமூக நல அமைப்புகளில் உறுப்பினராகவும் அங்கத்துவம் வகித்து சமூக பணியாற்றுகின்ற சிறந்த சமூக சேவையாளராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
நடராஜா மலர்வேந்தன்