...
செய்திகள்

சமுர்த்தி வங்கியால் கடன் பெற்றுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள்  பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர்-பா.சிவநேசன்

சமுர்த்தி வங்கியில் கடன் பெற்றுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டப்புறங்களில் வசிப்பவர்களுக்கு வங்கி நிர்வாகத்தின கடுமையாக நெருக்கடிகளை கொடுத்துவருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா.சிவநேசன் தெரிவித்துள்ளார். 
தோட்டங்களை மையப்படுத்தி துண்நிதி நிறுவனங்கள் கடன்களை வழங்கியுள்ளது போன்று சமுர்த்தி வங்கியும் கடன்களை வழங்கியுள்ளது. சமுர்த்தி வங்கியில் தோட்டப்புற மக்கள் அதிகமான கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபடுகின்றனர். 
தற்போதை கொவிட் பெருந்தொற்றுக்காலத்தில் கடன் தவனைகளை உடனடியாக செலுத்துமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது நியாயமற்றது. குறிப்பாக கொவிட் தொற்றுக்காரணமாக நாட்டின் அனைத்து தொழில்துறைகளும் முடங்கியுள்ளன. தோட்டங்களில் வசிக்கும் பெரும்பாளான மக்கள் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளனர். 
சிறு கைத்தொழில்கள், வர்த்தக நிறுவனகளில் மற்றும் அன்றாட கூலி என்ற அடிப்படையில் தோட்டப்புறங்களில் வசிக்கும் மக்கள் பணியாற்றி வந்தனர். தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே பணியில் ஈடுபடுகின்றனர். தற்போதை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக தோட்டத் தொழிலாளர்களும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். 
தலவாக்கலை, மஸ்கெலியா, டயகம, பொகவந்தலாவ என மலையகத்தின் பல பிரதேசங்களில் மக்கள் இவ்வாறு சமுர்த்தி வங்கியின் கடன் நெருக்கடிக்கு முகங்டிகொடுத்துள்ளனர். இவர்களுக்கு சலுகைக்காலத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக பிரதிநிதிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும். கொவிட் தொற்று காரணமாக அனைவரும் வருமானத்தை இழந்து வாழ்வதற்கு வழியின்றி தவிக்கின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen