சமூகம்
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டவுள்ளது.
நுகர்வோர் அதிகார சபை இதற்கான தீர்மானத்தை இன்று மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், 1,628 ரூபாயாக காணப்பட்ட 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை, இன்று நள்ளிரவு முதல் 1, 823 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.