செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் நாடு முழுவதும் விற்பனைக்காக வைக்கப்பட வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் வலியுறுத்தப்பட்டு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் சமையல் நோக்கத்திற்கான 12.5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்ய முடியாதென எவரும் நிராகரிக்க முடியாது. குறித்த வகை சிலிண்டர்களை தமது கட்டுப்பாட்டில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கவும் முடியாது. அத்துடன் சிலிண்டரை கொள்வனவு செய்ய வேண்டாமென பாவனையாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வற்புறுத்தவும் முடியாதென பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com