...
செய்திகள்

சமையல் எரிவாயு விலைகளை மீள அதிகரிக்குமாறு லாப்ஸ் கேஸ் நிறுவனம் கோரிக்கை

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரியுள்ளது.தாம் விலையை அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எந்தளவு தொகையினால் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பது குறித்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.தற்போது, அத்தியாவசிய பொருட்களுக்கான பட்டியலிலிருந்து சமையல் எரிவாயு நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நிறுவனத்துக்கு எரிவாயு  விலையை அதிகரிக்கக்கூடிய இயலுமை காணப்படுகிறது.

இதற்கு முன்னதாக 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலையை லாஃப்ஸ் நிறுவனம் 984 ரூபாவினால் அதிகரித்தது.அதற்கமைய, அதன் புதிய விலை 2,840 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அவ்வாறே 5 கிலோ சமையல் எரிவாயுவின் விலையை 393 ரூபாவினால் அதிகரித்ததையடுத்து, அதன் விலை 1,136 ரூபாவாக உயர்வடைந்தது.

மேலும், லிட்ரோ கேஸ் நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி 12.5 கிலோ எரிவாயுவின் விலை 1,182 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.தற்போது சந்தையில் 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு கொள்கலனின் புதிய விலை 2,675 ரூபாவாகக் காணப்படுகிறது.

அத்துடன், ஐந்து கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலையும் 473 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதன்படி புதிய விலை 1,071 ரூபாவாக அதிகரித்தது.அவ்வாறே, 2.5 கிலோ எடையுள்ள சிறிய சிலிண்டரின் விலையும் 217 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 506 ரூபாவாக உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen