செய்திகள்

சமையல் எரிவாயு விலை தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்!!

சமையல் எரிவாயு அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உப குழு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு குறித்த நிறுவனங்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் இன்றைய கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் லாப் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அமைச்சரவை உபகுழு கூடுகின்றனது.

Related Articles

Back to top button