அரசியல்செய்திகள்மலையகம்

சம்பள பேச்சு வார்த்தை-தொழிலாளர்களுக்கு பாதகமான சரத்துக்களை அகற்றுவது தொடர்பில் யோசனைகள் முன்வைப்பு ..


  1992ம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் கம்பெனிகள் வசம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து பெருந்தோட்ட மக்களின் சம்பள நிர்ணயம்,மற்றும் தொழிலாளர்கள் சேமநலன்  சார்ந்த தீர்வுகளை  மேற்கொள்வது சம்பந்தமான கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்ட தொழில் சங்கங்களுக்கும், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டது.


     

இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதான சக்தியாக  இருந்து வருகின்றது. 

இதனால் தொழிலாளர்களது சேமநலன் சார்ந்த பல விடயங்கள் கடந்தகால ஒப்பந்தங்களையடுத்து நடைமுறைக்கு வந்தன என இ.தொ.காவின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது  இந்த வகையில் இது மிகமுக்கியமான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று (21/12) தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா தலைமையில் இடம்பெற்றது .
 

இம்முறை இடம்பெற்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்தையில் சில சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பின்னர் இடம்பெற்ற நான்காவது கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இதுவாகும். 
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துக்கொள்ளும் நான்காவது பேச்சுவார்த்தையாகவே இது அமைகின்றது. 

ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர் தோட்ட தொழிலார்களுக்கு 1000  சம்பள உயர் வழங்கப்படவேண்டும் என்று உறுதியாக இருக்கும் நிலையில், இப்பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. 
இன்று  இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தொழிலார்களுக்கு பாதகமான சரத்துக்களை முதலாளிமார் சம்மேளனத்தில் யோசனையில் இருந்து அகற்றுவது சம்மந்தமாக இதில் ஆராயப்பட்டுள்ளது.   

மேலும் எதிர்வறும் 31  திகதி மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.
பொதுவாக இப்பேச்சுவார்தை முன்னேற்றகரமானவை என சகல தரப்புகளும் தெரிவித்தன. 
இப்பேச்சுவார்த்தையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரம், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான்,  பிரதி தலைவர் அனுஷா சிவராஜா, இ.தொ.காவின் நிறுவாக உபதலைவர் மாரிமுத்து, உபதலைவர் மதியுகராஜா, சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி, முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இ.தொ.காவின் ஊடக பிரிவு

Related Articles

Back to top button