செய்திகள்

(video)சம்மாந்துறை வீடொன்றில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பு!

அம்பாறை – சம்மாந்துறையில் வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வுத்துறை தகவலுக்கு அமைய காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் , இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இணைந்து குறித்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

குறித்த வீட்டின் ஒரு பகுதி அடையாளம் தெரியாத சிலரால் வாடகைக்கு பெறப்பட்டிருந்த நிலையில், நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னணியில் அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஐ.எஸ் அமைப்பின் சீருடைகள், தற்கொலை குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட போது அணிந்திருந்த ஆடை மற்றும் சின்னம் பொறிக்கப்பட்டதிரை சீலை, 150 ஜெலிட்நைட் குச்சிகள் மற்றும் 100,000 இரும்பு குண்டுகள் மற்றும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது என போலீஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காட்சி அனுசரணை newsfirst

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com