செய்திகள்

சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கிலிருந்து நீதியரசர் ஜயவர்தனவும் விலகல்!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்கும் மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்திலிருந்து பிரசன்ன ஜயவர்தன இன்று விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களின் நிமிர்த்தம் அவர் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரியந்த ஜயவர்தன நீதியரசர் குழாத்திலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button