செய்திகள்

சரிவை சந்தித்துள்ள ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி, 167.41 ரூபாவாக, பதிவாகியிருந்ததுடன், கொள்வனவுப் பெறுமதி, 163.87 ரூபாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன், தொடர்ச்சியாக இலங்கை ரூபாவின் பெறுமதி சரிவை சந்தித்து வருவதனால் இறக்குமதிப் பொருள்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, ரூபாயின் பெறுமதி குறைந்துள்ளதால், நாட்டின் கடன் தொகையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button