உலகம்

சர்ச்சையான ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்காவின் கருத்து.

சர்ச்சைக்குரிய ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவு, முற்றிலும் அதன் உள்நாட்டு விவகாரம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அத்துடன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதி காக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஓர்ட்டகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் ஓர்ட்டகஸ் தெரிவித்துள்ளார்.

தடுப்புக்காவல்கள் தொடர்பான தகவல் கவலையளிப்பதாகவும் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்புகளும் அமைதி காக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலிறுயுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய இதுவே சரியான தருணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download