செய்திகள்

சர்பராஸ் அகமட்டை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமாம்.

பாகிஸ்தான் அணியின் மூன்று வகைகளுக்குமான போட்டிகளுக்கும் சப்ராஸ் அஹமட் தலைவராக செயற்படுகிறார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் தோல்வியடையும் பல சந்தர்ப்பங்களில் சப்ராஸ் அஹமட் சோபிக்க தவறியிருந்தார்.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து சப்ராஸ் அஹமட் நீக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

எனினும் இன்று அறிவிக்கப்பட்ட இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 குழாத்திலும் அவரே தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனவே சப்ராஸ் அஹமட்டை பாகிஸ்தான் அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சஹிட் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 03 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரொன்றில் மோதவுள்ளன.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி கராய்ச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்காக 16 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பிரகாசித்த வஹாப் ரியாஷ் , இமாட் வசீம் மொஹமட் அமீர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களான சஹின் ஷா அப்ரிடி மற்றும் ஹசன் அலி ஆகியோருக்கு இந்த குழாத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதேவேளை மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரானஇப்ரிகர் அஹமட்டுக்கு நான்கு வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அவர் இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சார்ஜாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

25 வயதான சகலதுறை வீரரான Mohammad Nawaz ஓராண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதேவேளை சிரேஷ்ட வீரர்களான சொய்ப் மலிக் மற்றும் மொஹமட் ஹபீஸுக்கும் இந்த குழாத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

Related Articles

Back to top button
image download