செய்திகள்

சர்வதேச அழுத்தங்களை மீறி தனக்கு நியமனம் வழங்கப்பட்டமை குறித்து சவேந்திர சில்வா விளக்கம்

நாட்டின் தேசியப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், ஜனாதிபதி தன்னை இராணுவத்தளபதியாக நியமித்ததாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் தனது கடமையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலங்களிலும் இதேபோன்று சேவைகளை நாட்டுக்கு வழங்க முன்நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button