விளையாட்டு

சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் மன்னார் வீரன்

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ள 21 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய அணியில், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த, ஜூட் ரோஜன் கெளசிகன் தேசிய அணி வீரராக தெரிவாகி இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடவுள்ளார்.

இந்தியாவில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இம்மாதம் 25 ஆம் திகதி இடம் பெறவுள்ள SAFF கிண்ண கால்பந்தாட்ட சுற்று போட்டியில் இலங்கை தேசிய அணியில் இடம் பிடித்துள்ள மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவனும், சென்/ஜோசப் விளையாட்டு கழக வீரருமான ஜூட் ரோஜன் கெளசிகன் (தம்பா) விளையாடவுள்ளார்.

மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி கால்பந்தாட்ட அணியில் தலைவராக விளையாடிய தம்பா இவ்வருடம் இடம் பெற்ற தேசிய அணிக்கான தெரிவில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து தேசிய அணியில் இடம் பெற்றதுடன் தற்போது இந்தியாவில் இடம் பெறவுள்ள போட்டிக்கு மன்னார் மாவட்டம் சார்பாக இலங்கை அணியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button