...
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் ரொஸ் டெய்லர்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நியூசிலாந்து வீரர் ரொஸ் டெய்லர் அறிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை அவர் பதிவிட்டுள்ளளார்.

37 வயதான ரொஸ் டெய்லர், இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அத்துடன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து அணி சார்பில் அதிக ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட வீரர் என்ற பெருமை அவரை சாரும்.

இந்த ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை நியூசிலாந்து அணி வெல்வதற்கான முக்கிய காரணம் இவராகும்.

இந்நிலையில், நியூஸிலாந்தில் நடைபெறும் பங்களாதேஷிற்கு எதிரான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அவுஸ்திரேலியா, நெதர்லாந்துக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகளுடன் ஒய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen