சமூகம்

சர்வதேச சந்தையின் கவனத்தை ஈர்த்த இலங்கை அன்னாசி

உலகில் அன்னாசி செய்கை செய்யும் நாடுகளில் தற்போது மிகவும் சுவையான அன்னாசி சர்வதேச சந்தைக்கு இலங்கையில் இருந்தே வருகின்றது.

இதன் காரணமாக எமது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற அன்னாசி Sri Lanka Pineapple என்ற வார்த்தக நாமத்துடன், சர்வதேச சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையின் காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கு அமைய அன்னாசியின் சுவை ஏனைய நாடுகளுக்கு இல்லாது போயுள்ளது.

இதனால் பல நாடுகளில் இருந்து இலங்கையின் அன்னாசிக்கு பாரிய கேள்வி இருந்து போதிலும் தேவையான அளவு செய்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்றுமதியை இலக்காக கொண்டு மொனராகலை, மெல்லவத்தை பிரதேசத்தில் 75 ஏக்கர் நிலப்பரப்பில் அன்னாசி பயிர் வலயம் விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டில் மிகவும் சுவையான அன்னாசி மொனராகலை மாவட்டத்திலேயே பயிரிடப்படுகிறது என தெரியவந்துள்ளது.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button