...
செய்திகள்

சர்வதேச சிறுவர் தினத்தில் முல்லைத்தீவில் போராட்டம் !

சர்வதேச சிறுவர் தினமான இன்று (01.10.2021) முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

1,669 ஆவது நாளாக தொடர் போராட்டம் இடம்பெற்றுவரும் முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டது. 

இறுதிபோரின் போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் குடும்பங்களுடன் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு  என்ன நடந்தது ? இராணுவத்தால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது? என்ற கோஷங்களுடன் சர்வதேச சிறுவர் தினமான இன்றையநாளை நினைவுகூர்ந்து   காணாமல் ஆக்கபட்ட தமிழ் குழந்தைகளுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அண்மையில் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில்  தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கெதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

கொட்டும் மழைக்கு மத்தியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட  புலனாயவாளர்களும் போராட்டத்தை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen