உலகம்செய்திகள்

சவுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி

சவுதி அரேபியாவில் நேற்று பின்னேரம் இடம்பெற்ற வாகன விபத்தில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ் விபத்தில் மருதமுனையைச் சேர்ந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சவுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக இவர்கள் மூவரும் சவுதி அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒருவர் சம்பவ இடத்தில் மரணித்துள்ளதுடன் ஏனைய இருவரில் ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இவ்விபத்து தொடர்பில் சவுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

49 Comments

  1. I encountered your site after doing a search for new contesting using Google, and decided to stick around and read more of your articles. Thanks for posting, I have your site bookmarked now.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button