சவுதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடூரம்?

சவுதி அரேபியாவுக்குப் பணிப் பெண்ணாக சென்ற பெண்ணெருவர் அங்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் காரணமாக நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு குறித்த பெண் பணிப் பெண்ணாக சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கின்றார்.
குறித்த பணிப்பெண் தொழில் செய்த வீட்டு உரிமையாளர்களால் நீண்டகாலமாக தாக்கப்பட்டு உணவு ,உடை வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டு , படுகாயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்
கலேவளை பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படுபிகின்றது. தற்போது நாடு திரும்பியுள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
மேலும் குறித்த பணிப்பெண் நான்கு வயது பிள்ளையின் தாயும் என்பதோடு
குருநாகல் வௌிநாட்டு வேலை வாய்ப்பு துணைப் பணியகம் ஒன்றின் தலையீட்டுடன் போலி ஆவணங்களை தயாரித்து, தனது விருப்பத்தின் பேரிலேயே அவர் இவ்வாறு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நீண்டகாலம் சம்பளம் வழங்கப்படாமல், கறுப்பு நிற ஆடையுடன் மட்டும் விமான நிலையத்தில் தான் இறக்கிவிடப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நிகழ்ந்த அநீதிகளுக்கு தமக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என, அப் பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற சம்பவங்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலையவாய்ப்பு பணியகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது.