உலகம்

சவுதி அரேபியாவுடனும் ஈரானுடனும் இம்ரான் கான் பேச்சுவார்த்தை

கருத்து மோதல்கள் காணப்படும் சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஈரானுடன் பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளார்.

தெஹ்ரானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்றைய தினம் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரொஹானியை சந்தித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பு கூற வேண்டும் என சவூதி அரேபியா உள்ளிட்ட உலக நாடுகள் குற்றஞ்சுமத்தி வருகின்றன.

இரு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினை காணப்படுவதாகவும் அதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய ைபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாளை தினம் சவூதி அரேபியாவுக்கு விஜயம்
மேற்கொள்ளவுள்ளார்.

Related Articles

Back to top button
image download