செய்திகள்

சவுதி சபாநாயகரை சந்தித்த இலங்கை சபாநாயகர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள சவுதி அரேபியாவின் சபாநாயகர் அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹீம் அஷ்ஷெய்க் குழுவினரை சபாநாயகர் கரு ஜயசூரிய சந்தித்துள்ளார். 
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

சவுதியில் உள்ள இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புக்களை விரிவுபடுத்தவும் திறமையான முயற்சியாளர்களை அந்நாட்டிற்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும் சபாநாயகர், சவுதி சபாநாயகரிடம் உறுதியளித்துள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Back to top button
image download